இனி சிவகார்த்தியேன் போகப்போற பாதை ‘சிங்கப் பாதை’… புதிய அப்டேட்!

இனி சிவகார்த்தியேன் போகப்போற பாதை ‘சிங்கப் பாதை’… புதிய அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். அதற்குமுன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்திலும், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இனி சிவகார்த்தியேன் போகப்போற பாதை ‘சிங்கப் பாதை’… புதிய அப்டேட்!

இந்த இரு படங்களும் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அசோக் என்பவர் தான் இயக்கவுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இனி சிவகார்த்தியேன் போகப்போற பாதை ‘சிங்கப் பாதை’… புதிய அப்டேட்!

இந்த படத்திற்கு ‘சிங்க பாதை’ என்று தலைப்பு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சிவாஜி படத்தில் இனி நான் போற பாதை சிங்கப் பாதை என்று ரஜினி சொல்லும் மாஸ் டயலாக்கின் தோன்றலில் சிங்கப் பாதை என்ற தலைப்பை சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this story