டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’செல்லம்மா’ பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…

டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’செல்லம்மா’ பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் டாக்டர். இந்தப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.  மேலும் இந்தப்படத்தில் வினய், கலையரசன் மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’செல்லம்மா’ பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிரூத் இசையமைக்கிறார். 80 சதவீத படப்பிட்டிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தை கிறிஸ்துமஸுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்து படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடன் மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’செல்லம்மா’ பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…
இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் தடை செய்யப்பட்ட டிக்டாக் குறித்த பாடலை சிவகார்த்திகேயனே எழுதியிருக்கிறார்.  இந்த அறிவிப்போடு அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோர்கள் டிஸ்கஷன் செய்யும் 2 நிமிட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ யூ டியூபில் ட்ரெண்டானது..


தற்போது, டிக் டாக் தடையை வைத்தே ஒரு பாட்டு செய்துவிடலாம் என்று காமெடியாக அனிருத்திடம் சிவகார்த்திகேயன் கேட்க, அதனைத் தொடர்ந்து வரும் உரையாடல்கள் முடிந்தவுடன் “இனிமே டிக் டாக்  எல்லாம் இங்க பேனுமா.. நேரா டூயட் பாட வாயேன்மா” என்று பாடல் தொடங்குகிறது. ‘செல்லம்மா’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, வெளியான 20 நிமிடங்களில் 95 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது…

Share this story