லாக்டவுன் முடிந்தும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டும் வில்லன் நடிகர்..!

லாக்டவுன் முடிந்தும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டும் வில்லன் நடிகர்..!

திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் ஒருவர், நிஜ வாழ்க்கையில் கதாநாயகனாக இருப்பதில்லை. அதுபோல திரைப்படங்களில் வில்லனாக நடிக்கும் ஒருவர் நிஜவாழ்க்கையில் வில்லனாக இருப்பதில்லை. ஆனால் திரைப்படங்களில் வில்லனாக நடித்த ஒருவர், நிஜ வாழ்க்கையில் கதாநாயகனாக வாழ்வது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டியது.
அப்படி, கவனிக்கப்படும் நடிகர் நடிகர் சோனு சூட். திரைப்படங்களில் வில்லனாகவும், நிஜ வாழ்க்கையில் கதாநாயகனாகவும் மாறி கவனம் பெற்றுள்ளார்.
இந்த கொரோனா தொற்று காலத்தில் தனது பல நல்ல காரியங்கள் மூலம் மக்கள் மனதில் கதாநாயகனாக நிற்கிறார்.

லாக்டவுன் முடிந்தும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டும் வில்லன் நடிகர்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் கடந்த 20 ஆண்டுகளில் 71 படங்கள்தான் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்கள். ஆனால், திரைப்படங்களில் மட்டும்தான் நான் வில்லன், நிஜ வாழ்க்கையில் ஹீரோ என்பதை சோனுசூட் சொல்லாமல் சொல்லி வருகிறார்.
ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடிய விவசாயி ஒருவர், தனது நிலத்தில் இரு மகள்களை ஏர் சுமக்க வைத்து உழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. அன்று மாலையே அந்த விவசாயி வீட்டு வாசலில் ஒரு டிராக்டரை நிறுத்தினார்.

Sonu Sood is no less than God to us': Farmer to whom the actor gifted a tractor - bollywood - Hindustan Times
ரஷியாவில் படித்து வரும் தமிழக மாணவர்கள் 90 பேர், இந்தியா வரவேண்டும் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். அவர்களோடு சேர்த்து ரஷியாவில் இருந்து 200 இந்தியர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வந்தார்.
கிர்கிஸ்தானில் சோறு தண்ணி இல்லாமல் தவிப்பதாக மாணவர்கள் வீடியோ வெளியிடுகின்றனர். அவர்களுக்கு தனது சொந்த செலவில் தனி விமானத்தை அமர்த்தி அழைத்து வந்தார்.

லாக்டவுன் முடிந்தும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டும் வில்லன் நடிகர்..!
கேரளாவில் இருந்து ஒடிசாவுக்கு 170 தொழிலாளர்களை, சொந்த செலவில் பேருந்து அமர்த்தி கொண்டு வந்து சேர்த்தது, மும்பையில் தனது ஸ்டார் ஓட்டலில் தூய்மை பணியாளர்களை தங்க வைத்தது என பல விஷயங்கள் சத்தமில்லாமல் சோனு செய்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இப்படி, ஊரடங்கு நாட்களில் மட்டும் அவர் செய்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. சமீபத்தில் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியாத ஒரு பள்ளிச்சிறுமிக்கு ஸ்மார்ட்போன் வாங்கி அளித்தது என தொடர்கிறது.

லாக்டவுன் முடிந்தும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டும் வில்லன் நடிகர்..!
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் இந்த வேலைகளை சோனுசூட் தொடர்ந்து வருகிறார். பிலிப்பைன்ஸில் படிக்கச் சென்ற மாணவர்களை இந்த மாதம் 5 ஆம் தேதி இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு வந்ததில் அவரது பங்கும் உள்ளது.
இந்த சமூக சேவைகளால் ஈர்க்கப்பட்ட பலம், தற்போது விதவிதமான கோரிக்கைகளையும் சோனு சூட் வசம் கொண்டு வருகின்றனர்.
விபத்தில் அடிபட்ட ஏழை பெண்ணின் கால்களுக்கு அறுவை சிகிச்சை, ஆட்சிப்பணி தேர்வு எழுத புத்தகம் கேட்பது, மழை வெள்ள சேதங்களுக்கு நிவாரண பணிகள் என கோரிக்கைகளை மக்கள் அடுக்கி வருகின்றனர்.

அவரது சமூக வலைதள பக்கத்தில் மக்கள் விதவிதமாக தங்களது நன்றிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். வீடியோ, புகைப்படம், ஓவியம் என தங்களது அன்பினை வெளிப்படுத்துகின்றனர்.
இதற்கிடையே அவரது உதவி மனப்பான்மையை கேலி செய்பவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்… சோனு சூட் “வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை”, ”வீட்டில் கரண்ட் இல்லை“ என ஏகத்துக்கும் கிண்டல் செய்வதும் தொடர்கிறது.

லாக்டவுன் முடிந்தும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டும் வில்லன் நடிகர்..!

ஆனால், சோனுசூட் நிஜ வாழ்வில் கதாநாயகனாக இருப்பதால், அந்த கேலிகளுக்கு அவர் அளிக்கும் எதிர்வினைகளும் ரசிக்கும் வகையிலேயே இருக்கின்றன.
”பார்க்கத்தான் நான் நல்லவன், ஆனால், உள்ளுக்குள்ள ரொம்ப கெட்டவன்டா” என பஞ்ச் டயலாக் பேசும் நம்ம ஹீரோக்களுக்கு மத்தியில், ”பார்க்கத்தான் நான் வில்லன் ஆனா உள்ளுக்குள் ரொம்ப நல்லவன்டா” என சொல்லாமல் சொல்கிறார் சோனு சூட்.
-அ.ஷாலினி

Share this story