விநாயகர் சதுர்த்தி கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவிய சோனு சூட் !

விநாயகர் சதுர்த்தி கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவிய சோனு சூட் !

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் பல மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார் நடிகர் சோனு சூட். இன்று மக்களால் ரியல் ஹீரோ என்று கொண்டாடப்பட்டு வருகிறார். ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவிய சோனு சூட் !
தனது பிறந்த நாள் பரிசாக வேலையில்லாத மூன்று லட்சம் பேருக்கு பல நிறுவனகளின் உதவியுடன் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாக அறிவித்தார். பின்னர் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்தார். பின்னர் மாஸ்கோவில் சிக்கியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் பட்டதாரி மாணவர்கள் இந்தியா திரும்ப சோனு சூத் ஒரு விமானத்தை ஏற்பாடு செய்தார்..
 
விநாயகர் சதுர்த்தி கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவிய சோனு சூட் !
39 குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகபிலிப்பைன்ஸ்-லிருந்து டெல்லிக்கு அழைத்து வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்னும் லிஸ்ட் கொண்டே தான் போகிறது.
வரும் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதிகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர் திரும்ப சோனு சூட் உதவி செய்துள்ளார். 300-க்கும் அதிகமானோர் சொந்த ஊர் அடைந்துவிட்டனர். இன்னும் பலர் ஊர் திரும்ப தயாராகி வருகின்றனர். தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலாளர்களையும், உலகம் முழுக்க உள்ள இந்தியர்களும் அவர்கள் சொந்த ஊர் திரும்ப சோனு சூட் உதவி செய்து வருகிறார்.

Share this story