உலகம் முழுக்க உதவி செய்ய புறப்பட்ட சோனு சூட்… பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 39 குழந்தைளுக்கு அறுவை சிகிச்சை!

உலகம் முழுக்க உதவி செய்ய புறப்பட்ட சோனு சூட்… பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 39  குழந்தைளுக்கு அறுவை சிகிச்சை!

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து நம்பிக்கை அற்று கண்ணீருடன் நின்ற ஏழைகளின் முன் தன்னுடைய உதவிகள் மூலம் கடவுளாகத் தென்பட்டார் சோனு சூத். ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தன் மகள்களை வைத்து வயலை உழுத ஆந்திர விவசாயிக்கு உடனே டிராக்டர் வாங்கி கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
உலகம் முழுக்க உதவி செய்ய புறப்பட்ட சோனு சூட்… பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 39  குழந்தைளுக்கு அறுவை சிகிச்சை!
வாழ்வாதாரம் இழந்து ரோட்டில் சிலம்பம் சுற்றி உதவி கேட்ட மூதாட்டிக்கு தற்காப்பு கலை பயிற்சி பள்ளி ஆரம்பித்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்த நாள் பரிசாக வேலையில்லாத மூன்று லட்சம் பேருக்கு பல நிறுவனகளின் உதவியுடன் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாக அறிவித்தார். பின்னர் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்தார். பின்னர்  மாஸ்கோவில் சிக்கியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் பட்டதாரி மாணவர்கள் இந்தியா திரும்ப சோனு சூத் ஒரு விமானத்தை ஏற்பாடு செய்தார். இன்னும் லிஸ்ட் கொண்டே தான் போகிறது.
உலகம் முழுக்க உதவி செய்ய புறப்பட்ட சோனு சூட்… பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 39  குழந்தைளுக்கு அறுவை சிகிச்சை!
தற்போது சோனு சூட் மேலும் 39 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றப் போகிறார். 39 குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர்களை பிலிப்பைன்ஸ்-லிருந்து டெல்லிக்கு அழைத்து வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் இதெற்கென்று தனி விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். சோனு சூத் வாடகைக்கு எடுத்த விமானம் ஓரிரு நாட்களில் டெல்லியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிலியரி அட்ரேசியா எனப்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட பல பின் தங்கிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் அவர்களால் டெல்லிக்கு வரமுடியவில்லை. அவர்களில் சிலர் ஏற்கனவே கல்லீரல் நோய் காரணமாக இறந்துவிட்டதால், அறுவை சிகிச்சைகளை விரைவில் செய்வதற்காக சோனு சூட் அவர்களைத் தன்  முயற்சியால் டெல்லிக்கு அழைத்து வருகிறார்.


“இந்த விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவோம். அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள்  இந்தியாவில் இருப்பார்கள். இந்த 39 தேவதூதர்கள்  வரிசையாக நிற்கிறார்கள். உங்கள் லக்கேஜ்களை எடுத்து வையுங்கள்”  என்று சோனு சூட் தெரிவித்துள்ளார்
 
 

Share this story