உதவி கேட்டு குவியும் மெசேஜ்கள்… திணறும் சோனு சூட்!

உதவி கேட்டு குவியும் மெசேஜ்கள்… திணறும் சோனு சூட்!

நடிகர் சோனு சூட் மொபைலுக்கு உதவி கேட்டு பல மெஸேஜ்கள் குவிந்த வண்ணம் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சோனு சூட் கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு யோசிக்காமல் உதவிக்கரம் நீட்டி வந்தார். தற்போது வரை தொடர்ந்து உதவி வருகிறார். எனவே மக்கள் அவரை நிஜ வாழ்விலும் ஹீரோவாகவே பார்த்து வருகின்றனர்.

உதவி கேட்டு குவியும் மெசேஜ்கள்… திணறும் சோனு சூட்!

சில தினங்களுக்கு முன்பு தான் சோனு சூட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டார். தற்போதும் சோனுவிடம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக உதவிகள் கேட்ட வண்ணம் தான் உள்ளனர்.

தற்போது கொரோனா நெருக்கடியில் உதவிகள் கேட்டு தன்னுடைய மொபைலுக்கு பல மெசேஜ்கள் வந்த வண்ணம் உள்ளதாக வீடியோ வெளியிட்டு சோனு சூட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வர வெளியிட்டுள்ள பதிவில் “உதவி கேட்பவர்களை முடிந்த வரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். அதில் தாமதம் ஏற்பட்டால் மன்னியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story