அக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் !

அக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி என அணைத்து உதவிகளையும் செய்து வந்தார்.

அக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் !

இவரது சமூக சேவையைப் பாராட்டி சமீபத்தில் ஐ.நா அமைப்பு அவருக்கு சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருது அளித்தது.

அக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் !

மேலும் பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜூ இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய பரிந்துரையில், சோனு சூட்டை பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நியமிக்க வேண்டும் என்று வேண்டுதல் விடுத்திருந்தார்.அதனை ஏற்று தேர்தல் ஆணையம் சார்பிலும் இதற்கு ஒப்புதல் வழங்கியது.

அக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் !

இந்நிலையில் எந்த பிரபலத்தின் ட்விட்டுக்கள் அதிகம் மக்களுக்கு சென்றடைகிறது என்பது குறித்த ஆய்வு முடிவுகளை அடிக்கடி வெளியிடும் ட்விட்டீட் என்ற நிறுவனம் அக்டோபர் மாதத்தின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அக்ஷய்குமார்,ஷாருக்கானை ஓவர்டேக் செய்த சோனு சூட் !

அதில் பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய்குமார்,ஷாருக்கான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை பிடித்துள்ளார் சோனு சூட்.அவருடைய ட்வீட்டுகள் 2.1 மில்லியன் மக்களிடம் சென்றடைந்துள்ளது.முதல் மூன்று இடத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி,விராட் கோலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story