“சொகுசா இருந்தது போதும், வெளியே வாங்க”… மக்கள் ஹீரோ சோனு சூட்டின் அழைப்பு!

“சொகுசா இருந்தது போதும், வெளியே வாங்க”… மக்கள் ஹீரோ சோனு சூட்டின் அழைப்பு!

அவர் நடித்த திரைப்படங்களால் வில்லனாகவே பார்க்கப்பட்டு வந்த சோனு சூட் தற்போது நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். இந்த கொரோனா காலகட்டத்தில் பலரின் வாழ்வில் ஒளியேற்றிய சோனு சூட் உண்மையிலேயே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தன் மகள்களை வைத்து வயலை உழுத ஆந்திர விவசாயிக்கு உடனே டிராக்டர் வாங்கி கொடுத்தார்.
“சொகுசா இருந்தது போதும், வெளியே வாங்க”… மக்கள் ஹீரோ சோனு சூட்டின் அழைப்பு!
வாழ்வாதாரம் இழந்து ரோட்டில் சிலம்பம் சுற்றி உதவி கேட்டார் மூதாட்டிக்கு தற்காப்பு கலை பயிற்சி பள்ளி ஆரம்பித்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்த நாள் பரிசாக வேலையில்லாத மூன்று லட்சம் பேருக்கு பல நிறுவனகளின் உதவியுடன் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாக அறிவித்தார். பின்னர் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்தார். இவ்வாறு தொடர்ச்சியாக உதவிகள் செய்து மக்கள் மனதில் ஹீரோவாக நீங்கா இடம் பிடித்து வருகிறார் சோனு சூட்.
“சொகுசா இருந்தது போதும், வெளியே வாங்க”… மக்கள் ஹீரோ சோனு சூட்டின் அழைப்பு!
தற்போது மற்றவர்களையும் உதவிகள் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார் சோனு சூட். “வறியவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் இருக்கும் வசதி படைத்தவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். உங்களுடைய சொகுசு உலகத்திலிருந்து வெளியே வாருங்கள். உங்களால் முடிந்தால் உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுங்கள். குறைந்தது ஒருவரின் மருத்துவச் செலவுக்காவது. நீங்கள் அனைவரும் இவ்வாறு செய்தால் அனைத்து துன்பங்களும் பாதியாக கரைந்து போகும்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story