ரசிகரின் சாலையோர உணவகத்திற்கு சென்று தானே சமைத்து மகிழ்வித்த சோனுசூட் !

ரசிகரின் சாலையோர உணவகத்திற்கு சென்று தானே சமைத்து மகிழ்வித்த சோனுசூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நன்குரம்போட்டு கெட்டியாக அமர்ந்துவிட்டார் . அவரது சேவைகளை பாராட்டும் விதமாக அரசும் ,மக்களும் பலவேறு வகையில் நன்றி பாராட்டி வருகின்றனர்.

ரசிகரின் சாலையோர உணவகத்திற்கு சென்று தானே சமைத்து மகிழ்வித்த சோனுசூட் !

பெரிய பெரிய காரியங்கள் செய்தும் அலட்டிக்கொள்ளாது இருக்கும் நடிகர் சோனுசூட் தற்போது ரசிகர் ஒருவரின் சாலையோர உணவகத்திற்கு நேரில் சென்று உணவு சமைத்து அவரை உற்சாகப்படுத்தியுள்ளார். சோனுவின் எளிமையான இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகரின் சாலையோர உணவகத்திற்கு சென்று தானே சமைத்து மகிழ்வித்த சோனுசூட் !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த அனில் குமார் என்கிற தீவிர சோனு சூட் ரசிகர் ஒருவர் சைனீஸ் பெயரில் இருந்த தனது உணவகத்தின் பெயரை சோனு சூட் என்று மாற்றினார். மேலும் அங்கிருக்கும் மெனு, பேனர் என எல்லாவற்றிலும் சோனு சூட்டின் புகைப்படங்களை வைத்திருந்தார்,இதற்கு ” நான் கடவுளைப் பார்த்ததில்லை, ஆனால் நான் நிஜ வாழ்வில் ஒரு கடவுளைக் கண்டேன், அது சோனு சூட் என்று ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுருந்தார்.

இந்த ட்வீட்டிற்குப் பதிலளித்த சோனு சூட் ‘அங்கே எனக்கு ஒரு ட்ரீட் கிடைக்குமா? என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்திருந்தது பயங்கர வைரலானது.

இந்நிலையில் சோனுசூட் அவரது ஹோட்டலுக்கு நேரடியாக நேற்று சென்று அந்த ரசிகருக்கு சப்ரைஸ் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this story