‘சூரரைப் போற்று’ 100 நாள் நிறைவு… ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்த படக்குழு!

‘சூரரைப் போற்று’ 100 நாள் நிறைவு… ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்த படக்குழு!

சூரரைப் போற்று படம் வெளியாகி 100 நாள் நிறைவடைந்ததை அடுத்து அப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று‘ அமேசான் ப்ரைம் தளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி வெளியானது. படத்திற்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிதும் பக்க பலமாக அமைந்தது.

‘சூரரைப் போற்று’ 100 நாள் நிறைவு… ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்த படக்குழு!

ஓடிடி-யில் வெளியாகும் இந்தப் படம் வரவேற்பு பெறுமா என்ற சந்தேகத்தை உடைத்தெறிந்து பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. அதையடுத்து இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.

அந்தக் காட்சிகளில் சூர்யா சர்வராக வேலை செய்வது போலவும், தானாகவே உளவு செய்யாரும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share this story