பெரிய திரையில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’!

பெரிய திரையில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’!

சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பெரிய திரையில் வெளியாக இருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று‘ அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது.

பெரிய திரையில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’!

அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாடினர். இருப்பினும் படம் தியேட்டரில் வெளியாகவில்லை என்று பலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தற்போது சூரரைப் போற்று திரைப்படம் பெரிய திரையில் வெளியாக உள்ளது.

தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதில் சூரரைப் போற்று திரைப்படம் திரையிடலுக்குத் தேர்வாகியுள்ளதால் வரும் ஞாயிற்றுக்கிழமை சத்யம் சினிமாஸ் தியேட்டரில் வெளியாக உள்ளது. படத்தை பெரிய திரையில் பார்க்கவேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Image

மேலும் சூரரைப் போற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினால் மீண்டும் படம் திரையிடப்படும். எனவே பார்வையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Share this story