‘சூரரைப் போற்று’ ட்ரைலர் வெளியானது… ரிலீஸ் தேதியும் உறுதியானது!

‘சூரரைப் போற்று’ ட்ரைலர் வெளியானது… ரிலீஸ் தேதியும் உறுதியானது!

சூர்யா, நெடுமாறன் ராஜாங்கமாக மிரட்டும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’சூரரைப் போற்று’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார்.

‘சூரரைப் போற்று’ ட்ரைலர் வெளியானது… ரிலீஸ் தேதியும் உறுதியானது!

தற்போது சூரரைப் போற்று படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சாதரண மனிதர். ஒரு மிகப்பெரிய விமான நிறுவனத்தை எப்படி நிறுவினார்? அதற்காக அவர் சந்தித்த வலிகள், பயணங்கள் ஆகியவை தான் இப்படம்.

சூரரைப் போற்று திரைப்படம் நவம்பர் மாதம் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

Share this story