Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

சீட்பெல்ட்ட போட்டுக்கோங்க… நாங்க வர்றோம்… சூர்யாவின் அதிரடி அறிவிப்பு!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் ட்ரைலர் அக்டோபர் 26-ம் தேதி விஜயதசமி அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’சூரரைப் போற்று’. இப்படம் ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார்.

இப்படத்தில் இந்திய விமானப்படை குறித்த காட்சிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. அதனால் முறையாக இந்திய விமானப்படை படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு தடையில்லா சான்றிதழ் அளித்தால் படத்தை வெளியிட முடியும். தற்போது விமானப்படை மற்றும் திரைப்பட வசதி அலுவகம் ஆகியோரிடமிருந்து படம் அனுமதி கிடைத்துள்ளது.

Image

தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யா நேரடியாக இந்த ட்ரைலர் அப்டேட்டை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் மிக நீண்ட காலமாக இதற்காக காத்திருப்பதை நான் அறிவேன். நாங்கள் படத்தை வெளியிடத் தயாராகிக் கொண்டிருந்தபோது நீங்கள் அனைவரும் மிகவும் பொறுமையாகவும், ஆதரவாகவும் இருந்தீர்கள். ஒரு குழுவாக நாங்கள் சொல்லக்கூடியது ஒரு பெரிய நன்றி. மேலும் இப்படத்தின் மூலம் நாங்கள் உங்களை மகிழ்விக்க முடியும் என்று உண்மையிலேயே நம்புகிறோம். ஆம், சூரரைப் போற்று படத்தின் டிரெய்லரை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அக்டோபர் 26 திங்கள் அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும். தயாராகுங்கள் நாங்கள் வருகிறோம்!” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!