கர்ஜிக்கும் சிங்கம் என மிரட்டும் அஜய் தேவ்கன்… ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ஸ்பெஷல் மோஷன் போஸ்டர்!

கர்ஜிக்கும் சிங்கம் என மிரட்டும் அஜய் தேவ்கன்… ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ஸ்பெஷல் மோஷன் போஸ்டர்!

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து அவருடைய ஸ்பெஷல் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ராஜமௌலி தற்போது ஆர்ஆர்ஆர் என்னும் பிரம்மாண்டப் படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராமராஜு மற்றும் கொமாராம் பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ராம் சரண் அல்லூரி ராம்ராஜுவாகவும், ஜூனியர் என்டிஆர்ம், கொமாராம் பீம் ஆகவும் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகை ஆலியா பாட், ராம் சரணுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கின்றார்.

கர்ஜிக்கும் சிங்கம் என மிரட்டும் அஜய் தேவ்கன்… ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ஸ்பெஷல் மோஷன் போஸ்டர்!

ஆர்ஆர்ஆர் படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடாமல் சஸ்பென்சாக வைத்து வந்த நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அஜய் தேவ்கனின் ஸ்பெஷல் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கர்ஜிக்கும் சிங்கம் என மிரட்டும் அஜய் தேவ்கன்… ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ஸ்பெஷல் மோஷன் போஸ்டர்!

போஸ்டரில் நூற்றுக்கணக்கான அந்நியர்கள் துப்பாக்கியுடன் அவரைக் குறிபார்த்து நிற்க, கர்ஜிக்கும் சிங்கம் போல் அவர்கள் முன் கம்பீரமாக அஜய் தேவ்கன் நிற்பது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தப் படத்திலிருந்து வெளியாகி வரும் ஒவ்வொரு அப்டேட்-ம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் மோஷன் போஸ்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story