யுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்!

யுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்!

தெலுங்கு வருடப் பிறப்பு தினமான யுகாதியை முன்னிட்டு பல டோலிவுட் படங்களின் சிறப்பு அப்டேட்கள் வெளியாகியுள்ளது.

யுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்!

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்திலிருந்து யுகாதியை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். ராதே ஷியாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

யுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இடம் பெற்றுள்ள ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் ராம் சரணும், ஜூனியர் என்டிஆரும் மக்கள் ஆர்ப்பரிக்க கொண்டாடப்படும் படியாக காணப்படுகிறது.

யுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்!

சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் இணைந்து நடித்து வரும் ‘ஆச்சார்யா’ படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் ராம் சரண் சித்தா என்ற கதாபாத்திரத்திலும், பூஜா ஹெக்டே நீலாம்பரி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

யுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்!

வெங்கடேஷ் மற்றும் ப்ரியாமணி நடிப்பில் உருவாகி வரும் ‘நாரப்பா’ படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

யுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்!

நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு கூட்டணி மூன்றாவதாக ஒரு படத்திற்காக இணைந்துள்ளனர். BB3 ரென்று அழைக்கப்படும் அந்தப் படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

யுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்!

சிவா நிர்வாணா என்பவர் இயக்கத்தில் நானி, ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் டக் ஜெகதீஷ் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

யுகாதி தினத்தில் வெளியான பிரம்மாண்ட தெலுங்கு படங்களின் ஸ்பெஷல் போஸ்டர்கள்!

சேகர் கம்முலா இயக்கத்தில் நாகசைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்து வரும் லவ் ஸ்டோரி படத்தின் ஸ்பெஷல் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

Share this story