நயன்தாராவின் அடுத்த படம் என்ன ? டைட்டிலை வெளியிட்ட படக்குழு…

நயன்தாராவின் அடுத்த படம் என்ன ? டைட்டிலை வெளியிட்ட படக்குழு…

நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நயன்தாரா-விக்னேஷ் சிவனும் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர். இந்த ஜோடி ரௌடி பிக்சர்ஸ் என்று சொந்த ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறது. இந்நிறுவனம் இளம் இயக்குனர்களை ஊக்குவித்து, நல்ல தரமான படங்களை தயாரித்து வருகிறது.

நயன்தாராவின் அடுத்த படம் என்ன ? டைட்டிலை வெளியிட்ட படக்குழு…

அந்தவகையில் நயன்தாரா நடிக்கும ‘நெற்றிக்கண்’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’ ஆகிய படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் சர்வதேச விருது பெற்ற கூழாங்கல் படத்தையும் இந்நிறுவனம்தான் தயாரித்துள்ளது.

நயன்தாராவின் அடுத்த படம் என்ன ? டைட்டிலை வெளியிட்ட படக்குழு…

இந்நிலையில் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த படம் ரௌடி பிக்சரஸ் நிறுவனத்தின் 5வது படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story