ஷாருக் கான் மகள், சுஹானா கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து காணாமல் போன பதிவுகள்!

ஷாருக் கான் மகள், சுஹானா கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து காணாமல் போன பதிவுகள்!

சுஹானா கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பெரும்பாலான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நியூயார்க்கில் உயர் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். சுஹானா கான் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். எனவே அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவேற்றி வருவார். நேற்று மாலை ஒரு புகைப்படத்தை சுஹானா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு அமிதாப் பச்சனின் பேத்தி நவேலி முதல் ஆளாக ”oooooo” என்று கமெண்ட் அடித்தார்.

ஷாருக் கான் மகள், சுஹானா கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து காணாமல் போன பதிவுகள்!

பின்னர் இன்று காலையில் அந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் சுஹானாவின் பக்கத்தில் வேறு சில பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுஹானாவின் ரசிகர் பக்கங்கள் நீக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சில தினங்களுக்கு முன்பு தான் கருப்பாக இருப்பதால், நிற பாகுபாடுக்கு ஆளானதாக சுஹானா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story