பட்டையை கிளப்பும் மெர்வின் இசை… சுல்தான் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

பட்டையை கிளப்பும் மெர்வின் இசை…    சுல்தான் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.

பட்டையை கிளப்பும் மெர்வின் இசை…    சுல்தான் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் சுல்தான். ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளர். தமிழில் முதல்முறையாக அறிமுகமாகும் ராஷ்மிகா மந்தனா இந்த ஹீரோயினாக நடித்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார் .

பட்டையை கிளப்பும் மெர்வின் இசை…    சுல்தான் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்க இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாத இருந்த நிலையில் கடந்த 1ம் தேதி சுல்தான் படத்தின் டீசர் வெளியாகியானது. ஆக்ஷனில் மிரட்டும் காட்சிகள், அதிரடி வசனங்கள் என டீசரை தெறிக்கவிட்டிருந்தார் இயக்குனர். இந்த டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இருந்ததாக கூறப்படுகிறது.

பட்டையை கிளப்பும் மெர்வின் இசை…    சுல்தான் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

இந்த படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கிய அப்டேட் ஒன்றையும் இன்று வெளியிட்டுள்ளது படக்குழு. விவேக் மெர்வின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. பட்டையை கிளப்பும் இசை சும்மா தெறிக்கவிடுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this story