கொரோனா நிதியாக 30 கோடி அளிக்கும் சன் குழுமம்!

கொரோனா நிதியாக 30 கோடி அளிக்கும் சன் குழுமம்!

இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்கும் வகையில் 30 கோடி நிதி அளித்து உதவுவதாக சன் குழுமம் உறுதியளித்துள்ளனர்.

இந்தியா தற்போது கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லாமை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்னும் நிலை ஏற்படத் துவங்கியுள்ளது. எனவே மக்களும் அரசுடன் இணைந்து இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க உதவி வருகின்றனர். இவர்களுடன் திரைதுறைப் பிரபலங்கள், பெரும் நிறுவனங்கள் ஆகியோரும் நிதியளித்து கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உதவி வருகின்றனர்.

கொரோனா நிதியாக 30 கோடி அளிக்கும் சன் குழுமம்!

தற்போது சன் டிவி கொரோனா நிதியாக 30 கோடி அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க சன் டிவி நெட்வொர்க் ரூ.30 கோடி நன்கொடை அளிக்கிறது.
இது தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பின்வரும் பல திட்டங்களுக்கு செலவிடப்படும்:

கொரோனா நிதியாக 30 கோடி அளிக்கும் சன் குழுமம்!
  1. இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு நன்கொடைகள்
  2. ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் போன்றவற்றை வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கூட்டு.
    கூடுதலாக, இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த அதன் அனைத்து ஊடக சொத்துக்கள் உட்பட அதன் வளங்களை மேம்படுத்த என இந்த நிதி செலவழிக்கப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.

Share this story