டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் விஜய் டிவி… விஜய் சேதுபதி, சிவர்த்திகேயனை வைத்து சன் டிவி போட்டுள்ள ஸ்கெட்ச்!?

டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் விஜய் டிவி… விஜய் சேதுபதி, சிவர்த்திகேயனை வைத்து சன் டிவி போட்டுள்ள ஸ்கெட்ச்!?

தமிழ் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை சன் டிவி தான் எப்போதுமே முடி சூடா மன்னனாக இருந்து வருகிறது. விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவை சன் டிவிக்குப் போட்டியாக அவ்வப்போது நெருங்கி வரும். உடனே புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மீண்டும் உச்சத்திற்கு சென்று தற்போது வரை முதலிடத்தில் நிலைத்து நிற்கிறது சன் டிவி.

டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் விஜய் டிவி… விஜய் சேதுபதி, சிவர்த்திகேயனை வைத்து சன் டிவி போட்டுள்ள ஸ்கெட்ச்!?

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக விஜய் டிவியின் டிஆர்பி எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை விஜய் டிவி வரிசையாகக் களமிறக்கி முதலிடம் என்னும் சிம்மாசனத்தில் ஏற முழுமுயற்சியில் உழைத்து வருகின்றனர்.

விஜய் டிவியின் வளர்ச்சியைப் பார்த்த சன் டிவி சற்றே கலக்கத்தில் உள்ளனர் என்றுதான் கூற வேண்டும். இதனால் மேலும் பல புதிய நிகழ்ச்சிகளைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர்.

டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் விஜய் டிவி… விஜய் சேதுபதி, சிவர்த்திகேயனை வைத்து சன் டிவி போட்டுள்ள ஸ்கெட்ச்!?

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் போட்டியாக சமையல் நிகழ்ச்சி ஒன்றைக் களமிறக்கத் தயாராகியுள்ள சன் டிவி அந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதியை வைத்து தொகுத்து வழங்க இருக்கிறார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தோம்.

சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி… குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியின் புதிய திட்டம்!

தற்போது சும்மா கிழி என்றொரு நிகழ்ச்சியையும் புதிதாகத் துவக்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஆர்ஜே விக்னேஷ் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வரும் விருந்தினர்களிடம் பல கேள்விகள் கேட்டு அவர்களை கோபப்படுத்துவது தான் நோக்கம் என்று சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு முதல் விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ள இருக்கிறாராம்.

எது எப்படியோ ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!

Share this story