கேப்ரில்லாவைக் காப்பாற்ற சுரேஷ் சக்ரவர்த்தி செய்த செயல்… பாராட்டு மழை பொழியும் ரசிகர்கள்!

கேப்ரில்லாவைக் காப்பாற்ற சுரேஷ் சக்ரவர்த்தி செய்த செயல்… பாராட்டு மழை பொழியும் ரசிகர்கள்!

கேப்ரில்லாவைக் காப்பாற்ற சுரேஷ் செய்த செயல் பார்வையாளர்களிடம் பாராட்டைப் பெற்று வருகிறது.

பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பத்திலிருந்தே சுரேஷ் சக்ரவர்த்தி மீது ஒரு எதிர்மறையான பிம்பம் பார்வையாளர்களிடம் ஏற்பட்டுவிட்டது. அவர் பேசும் வார்த்தைகள், செய்யும் செயல்கள் யாவும் போட்டியாளர்களை எரிச்சலடையச் செய்வதாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Image

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில், தான் காப்பாற்ற விரும்பும் போட்டியாளர்களை தங்கள் தோள் மேல் தூக்கிவைக்க வேண்டும். யார் அதிக நேரம் சுமக்கிறார்களோ அவர்கள் தோள் மேல் இருபவர்கள் காப்பாற்றப்படுவார்கள். என்று கூறப்பட்டது. இந்த டாஸ்க்கில் சுரேஷ் சக்கரவர்த்தி கேப்ரில்லாவைத் தோள் மேல் சுமக்கிறார். நீண்ட நேரம் சுமப்பதால் அவருக்கு மூச்சு திணறுகிறது. இருந்தாலும் விடாப்பிடியாக அவர் இருக்கிறார். ஆனால் கேப்ரில்லா அவர் நலன் கருதி கீழே இறங்கிவிடுகிறார்.

அதன்பின்னர் இருவரும் கட்டிபிடித்துக்கொள்வது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்வையாளர்களிடம் சுரேஷ் பாராட்டைப் பெற்று வருகிறார். ட்விட்டரில் #SureshChakravarthy என்ற ஹாஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Share this story