இந்தக் கூட்டணியில் நானும் இணைந்தது மகிழ்ச்சி… பிரபல காமெடி நடிகர் ட்விட்…#surya40

இந்தக் கூட்டணியில் நானும் இணைந்தது மகிழ்ச்சி… பிரபல காமெடி நடிகர் ட்விட்…#surya40

சூர்யா-பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்தது மகிழ்ச்சி என பிரபல காமெடி நடிகர் ட்வீட் செய்துள்ளார்.

இந்தக் கூட்டணியில் நானும் இணைந்தது மகிழ்ச்சி… பிரபல காமெடி நடிகர் ட்விட்…#surya40

நடிகர் சூர்யா – இயக்குனர் பாண்டியராஜ் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. சூர்யாவின் 40வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, திவ்யா துரைசாமி, தங்கதுரை, இளவரசு, சுப்பு பஞ்சு  உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தக் கூட்டணியில் நானும் இணைந்தது மகிழ்ச்சி… பிரபல காமெடி நடிகர் ட்விட்…#surya40

பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பூஜை இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கொரானா பாதிப்பால் தனிமையில் இருக்கும் சூர்யா கலந்துகொள்ளவில்லை. முதற்கட்ட பணிகள் நடைபெறும் இந்தப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகர் சூரியும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சன் பிக்சர்ஸ் மற்றும் பாண்டியராஜன் கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.இந்த வெற்றிக் கூட்டணியில் தானும் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story