புதிய படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

புதிய படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

சூர்யா புதிய படமொன்றில் வழக்கறிஞராக நடித்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக சூர்யா நீண்ட தலைமுடியுடன் புதிய கெட்டப்பில் நடித்து வருகிறார்.

புதிய படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

இந்நிலையில், தற்போது சூர்யா புதிய படம் ஒன்றில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

புதிய படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக அடுத்த சில நாட்களுக்கு சூர்யா கொடைக்கானலில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக மீண்டும் மதுரைக்கு செல்ல இருக்கிறார்.

புதிய படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

Share this story