சூர்யாவுக்கு வில்லனாகும் ஹீரோ… ‘சூர்யா 40’ புதிய அப்டேட்… surya 40

சூர்யாவுக்கு வில்லனாகும் ஹீரோ… ‘சூர்யா 40’ புதிய அப்டேட்… surya 40

சூர்யா 40 படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவுக்கு வில்லனாகும் ஹீரோ… ‘சூர்யா 40’ புதிய அப்டேட்… surya 40

சூர்யா- பாண்டியராஜ் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. சூர்யாவின் 40வதாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். சத்யராஜ் முதல்முறையாக சூர்யாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவுக்கு வில்லனாகும் ஹீரோ… ‘சூர்யா 40’ புதிய அப்டேட்… surya 40

இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, திவ்யா துரைசாமி, டி இமான், தங்கதுரை, இளவரசு, சுப்பு பஞ்சு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். கடந்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் முதல்கட்டமாக பொள்ளாச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சூர்யாவுக்கு வில்லனாகும் ஹீரோ… ‘சூர்யா 40’ புதிய அப்டேட்… surya 40

இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பது எழுந்து வந்தது. இந்நிலையில் நடிகர் வினய் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story