திடீரெனெ ட்ரெண்ட் ஆகும் சூர்யாவின் புகைப்படம்… வாடிவாசல் படத்திற்கான லுக்கா!?

திடீரெனெ ட்ரெண்ட் ஆகும் சூர்யாவின் புகைப்படம்… வாடிவாசல் படத்திற்கான லுக்கா!?

சூர்யாவின் ரீசென்ட் லுக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சூர்யா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கு கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாடிவாசல் படத்தின் போஸ்டர் வெளியாகி கொண்டாடப்பட்டது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சி.சு.செல்லப்பா எழுதி 1959-ம் ஆண்டு வெளியான ‘வாடிவாசல்’ என்ற குறுநாவலை தழுவி இந்தப்படம் உருவாக இருக்கிறது.

திடீரெனெ ட்ரெண்ட் ஆகும் சூர்யாவின் புகைப்படம்… வாடிவாசல் படத்திற்கான லுக்கா!?

முதல்முறையாக சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திடீரெனெ ட்ரெண்ட் ஆகும் சூர்யாவின் புகைப்படம்… வாடிவாசல் படத்திற்கான லுக்கா!?

தற்போது சூர்யா, நீளமான முடி மற்றும் தாடியுடன் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. வாடிவாசல் படத்திற்காகத் தான் இந்த கெட்டப் என்று கூறப்படுகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யாவின் தோற்றம் குட்டையான முடியுடன் இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் நீளமான முடி இருக்கிறது.

அப்பா,மகன் என இரு கெட்டப் இருக்கறதா சொன்னாங்களே, அதுக்கா தான் இருக்கும்!

Share this story