மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் டாப்ஸி!

மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் டாப்ஸி!

நடிகை டாப்ஸி பன்னு ரஷ்மி ராக்கெட் என்ற படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ‘ஷபாஷ் மிது’ என்ற தலைப்பில் உருவாகும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.


சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட டாப்ஸி “இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கைப் படத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக மூன்று மாத காலம் கிரிக்கெட் பயிற்சி பெற இருப்பதாகவும், படப்பிடிப்பை முடிக்கும் வரை பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் டாப்ஸி!


“உடல் ரீதியாக. என்னை ஒரு விளையாட்டு வீராங்கனை தோற்றத்திற்கு மாற்ற எனக்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. நான் குறிப்பிட்ட உணவை அளவிடப்பட்ட விகிதத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பைத்தியம் போல் பயிற்சி செய்தேன். அதிலிருந்து கொஞ்சம் இடைவெளி வேண்டும் நஎன்று வேண்டினேன். கடவுள் எனக்கு ஐந்து மாதங்கள் கொடுத்தார்(லாக்டவுன்)”. என்றும் இதற்கு முன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் டாப்ஸி!


‘ஷபாஷ் மிது’ படத்தை ராகுல் தோலாகியா என்பவர் இயக்குகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் லாக்டவுனால் படத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share this story