நஷ்டத்தை சந்திக்க தயாராகாத தயாரிப்பாளர்கள்… மீண்டும் ஓடிடியில் ரிலீசாகுமா புதிய படங்கள்…

நஷ்டத்தை சந்திக்க தயாராகாத தயாரிப்பாளர்கள்… மீண்டும் ஓடிடியில் ரிலீசாகுமா புதிய படங்கள்…

கொரானாவால் நஷ்டத்தை சந்திக்காமல் இருக்க மீண்டும் ஓடிடியில் புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதம்தான் கொரானா என்ற பெரும் தொற்று நம்மை ஆள வந்தது. இதிலிருந்து இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் அடுத்து இரண்டாவது அலை உருவாகி நம்மை அதிர்ச்சியுள்ளாகி உள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை என்னாகும் என்ற பல கேள்விகள் நம்மில் எழுகிறது. கொரானா தொற்றால் பல தொழில்கள் முற்றிலும் முடக்கியது போல் சினிமா துறையும் முடங்கியுள்ளது. இது கடந்த ஓராண்டாக ஒரே நிலையில்தான் உள்ளது.

நஷ்டத்தை சந்திக்க தயாராகாத தயாரிப்பாளர்கள்… மீண்டும் ஓடிடியில் ரிலீசாகுமா புதிய படங்கள்…

கடந்த ஜனவரிக்கு பிறகு நிலைமை படிபடியாக மாறி வந்தநிலையில் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ளோம். கொரானாவின் 2வது அலை விஸ்வரூபத்தை காட்ட தொடங்கியுள்ளது. இதனால் அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. வரும் 10ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும் இந்த கட்டுபாடுகளால் ஒரளவுக்கு நிலைமையை சரிசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால்தான் திரையரங்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நஷ்டத்தை சந்திக்க தயாராகாத தயாரிப்பாளர்கள்… மீண்டும் ஓடிடியில் ரிலீசாகுமா புதிய படங்கள்…

இந்நிலையில் இந்த உத்தரவால் படத்தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெரிய தயாரிப்பாளர் தங்களது படங்களை 50 சதவீத இருக்கைகளுடன் வெளியிட்டாலே போதும், போட்ட முதலீட்டை எடுத்துவிடலாம். ஆனால் சிறிய தயாரிப்பாளர் நிலைமையே வேறு. அதனால் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி தளங்களுக்கு விற்றால் லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டத்தை சந்திக்காமல் இருக்கலாம் என கருதுகின்றனர். ஓடிடி இல்லாவிட்டாலும் நேரடி தொலைக்காட்சி வெளியீட்டுக்கும் சில தயாரிப்பாளர்கள் ரெடியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்னொருபுறம் திரையரங்கு உரிமையாளர் புலம்பி வருகின்றனர்.

Share this story