தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்களின் இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது:

“தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.45 மணிக்கு சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (சத்யா ஸ்டுடியோஸ்) வளாகத்தில் நடைபெற உள்ளது. ஆகையால் நிரந்தர உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தொடர்ந்து வெற்றி பெற்ற நிர்வாகியிடம் சான்றிதழ் வழங்கப்படும்.”

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள்: டி ராஜேந்தர், ராமசாமி (எ) முரளி, பிஎல் தேனப்பன்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள்: கதிரேசன், மதியழகன், முருகன், செல்வகுமார் PT, சிங்காரவேலன், சிவசக்தி SD பாண்டியன் ஆர்கே சுரேஷ்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!


கௌரவ செயலாளர்கள் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள்: கலைப்புலி G சேகரன், கோட்டபாடி J ராஜேஷ், T.மன்னன், ராதாகிருஷ்ணன், N.சுபாஷ் சந்திர போஸ்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள்: சந்திரபிரகாஷ் S, ராஜன் K, JK சதிஷ்குமார்.

Share this story