‘800’ பட வாய்ப்பை மறுத்த டீஜே அருணாச்சலம்… இதுதான் காரணம்!

‘800’ பட வாய்ப்பை மறுத்த டீஜே அருணாச்சலம்… இதுதான் காரணம்!

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன், பாடலாசிரியர் தாமரை என ஏராளமானோர் விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலகவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

‘800’ பட வாய்ப்பை மறுத்த டீஜே அருணாச்சலம்… இதுதான் காரணம்!

இந்நிலையில் நடிகர் டீஜெய் அருணாசலம் ஈ-டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் 800 படத்தில் தான் நடிக்க மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். டீஜெய் அருணாசலம் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் மூலம் கோலிவுட்டில் நடிகராக அறிமுகமானார்.

“நான் இந்தியாவில் இருந்தபோது, ​​800 படத்தின் தயாரிப்பாளர்கள் என்னை அணுகியிருந்தனர். நான் அவர்களை அவர்களது அலுவலகத்தில் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் படத்தின் கதையை விவரித்தனர். அப்படத்தில் முத்தையாவின் இளைய வயது கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கேட்டனர்.

இப்படத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான போர் இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது, அது எனக்கு சரியாகத் தெரியவில்லை. என் அம்மாவும் தமிழ் ஈழத்தைச் சேர்ந்தவர் தான். போரில் ஏராளமான கொடுமைகள் இருந்தன, மேலும் படத்தின் கதைகளின் உள்ள அரசியலில் நான் தலையிட விரும்பவில்லை. எனவே நான் அவர்களிடம் முடியாது என்று மறுத்துவிட்டேன்.

‘800’ பட வாய்ப்பை மறுத்த டீஜே அருணாச்சலம்… இதுதான் காரணம்!

இது ஒரு கடினமான முடிவு, ஏனென்றால் விஜய் சேதுபதி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். அசுரனில் வேல்முருகன் போன்ற ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவர் என்னைப் பாராட்டினார், மேலும் சரியான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கும்படி என்னிடம் கூறினார், நான் அதைத் தான் செய்துள்ளேன் ”என்று அவர் கூறியுள்ளார்.

Share this story