ராம் கோபால் வர்மாவின் ஆணவக் கொலை படமான 'மர்டர்' திரைப்பட வேலைகளுக்கு நீதிமன்றம் தடை!

ராம் கோபால் வர்மாவின் ஆணவக் கொலை படமான 'மர்டர்' திரைப்பட வேலைகளுக்கு நீதிமன்றம் தடை!

தெலுங்கானாவை உலுக்கிய ஒரு கவுரவக் கொலை சம்பவத்தின் அடிப்படையில் ‘மர்டர்’ என்ற படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. பிரணய் (24) என்ற தலித் பிரிவைச் சேர்ந்த இளைஞர், உயர்வகுப்பைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். பிரணய் தனது மனைவி அம்ருதா மற்றும் தாயுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ​​கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கதையை அடிப்படையாக வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக கடந்த மாதம் ராம் கோபால் வர்மா அறிவித்திருந்தார்.
ராம் கோபால் வர்மாவின் ஆணவக் கொலை படமான 'மர்டர்' திரைப்பட வேலைகளுக்கு நீதிமன்றம் தடை!
அம்ருதா இந்தப் படத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதையடுத்து, இயக்குனர் மீதும் தயாரிப்பாளர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மர்டர் படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது இந்தப் படம் குறித்த வழக்கு நல்கொண்டா எஸ்சி/ எஸ்டி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ராம் கோபால் வர்மா மற்றும் திரைப்படத்துடன் தொடர்புடைய மற்றவர்களுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
ராம் கோபால் வர்மாவின் ஆணவக் கொலை படமான 'மர்டர்' திரைப்பட வேலைகளுக்கு நீதிமன்றம் தடை!
இன்று இந்த வழக்கு குறித்து தீர்ப்பளித்த தெலங்கானா நீதிமன்றம், இந்த ஆணவக் கொலை தொடர்பான விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை, இயக்குனர் ராம் கோபால் வர்மா இந்தப் பட வேலைகளைத் தொடங்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது.

Share this story