‘பிக்பாஸ் 6’ கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்ற போட்டியாளர் இவர்தான் !

biggboss 6

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் யார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. 

biggboss 6

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை நடைபெற்றது. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்ச்சி அமர்களமாய் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். 

biggboss 6

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் அசத்தலான உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இறுதிப்போட்டியாளராக இருந்தனர். இந்த மூவரில் யார் டைட்டிலை வெற்றி பெறுவார் என்ற பதற்றத்துடன் நிகழ்ச்சி சென்றது. 

biggboss 6

இறுதியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து மேடைக்கு அழைத்து வரப்பட்ட போட்டியாளர்களில் அசீம் வெற்றிப்பெற்றதாக கமல் அறிவித்தார். அவருக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டமும், 50 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது இடத்தை விக்ரம் பெற்றார். அவருக்கு 25 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை ஷிவின் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களும் கலந்துக்கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story