மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி!..

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி!..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி மாஸ் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.

தமிழில் முன்னணி ஹீரோவாக கலக்கிக்கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. பன்முக திறமைக்கொண்ட இவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து அசத்துபவர். மிகவும் எளிமையான மனிதராக தமிழ் திரையுலகில் வலம் வரும் விஜய் சேதுபதிக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி என பலமொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி!..

அண்மையில் விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதேபோன்று தெலுங்கில் மாபெரும் வெற்றிப்பெற்ற ‘உப்பன்னா’ படத்தில் வில்லனாக நடித்து இந்தியா சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர், மாமனிதன், விடுதலை, காத்து வாக்குல ரெண்டு காதல், 19 (1) (ஏ), மும்பைக்கார் உட்பட் பல திரைப்படங்கள் வெளியாக வரிசைக்கட்டி நிற்கின்றன.

இந்நிலையில் இவ்வளவு புகழ்மிக்க ஒரு நடிகர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது நம்பமுடியாத ஒன்று. ஆனால் அது உண்மைதான். பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘மாஸ்டர் செஃப் தமிழ்’ என்ற நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி ஏற்கனவே சர்வதேச அளவில் புகழ்பெற்றது. அதை மையமாக வைத்து தற்போது தமிழில் உருவாகி ஒளிப்பரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றை தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பி வருகிறது. அதில் விஜய் சேதுபதி, மிகவும் ஸ்டைலாக ஹெலிகாப்டரில் வந்திருங்கி மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். இந்த நிகழ்ச்சி விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Share this story