சோகத்தில் பிரபல சீரியல் நடிகை.. ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள் !

சோகத்தில் பிரபல சீரியல் நடிகை.. ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள் !

பிரபல நடிகை நிஷா, தனது பாட்டி மறைவு குறித்து வெளியிட்டுள்ள உருக்கமான பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சோகத்தில் பிரபல சீரியல் நடிகை.. ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள் !

தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நிஷா. ‘இவன் வேறமாதிரி’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘என்ன சத்தம் இந்த நேரம்’, ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’, ‘வில் அம்பு’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார்.

சோகத்தில் பிரபல சீரியல் நடிகை.. ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள் !

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வ மகள்’ ஹிட் சீரியலில் நடித்து புகழ்பெற்றார். இதையடுத்து தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சீரியல்களில் பிசியாக நடித்து வந்த இவர், பிரபல சீரியல் நடிகரான கணேஷ் வெங்கட்ராமணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

சோகத்தில் பிரபல சீரியல் நடிகை.. ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள் !

இந்நிலையில் நடிகை நிஷாவின் பாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சோகமான பதிவில், கமலா பாட்டியின் மறைவு, என்னுடைய வாழ்க்கையில் ஈடு இணையில்லாத பெரிய இழப்பு. அவர் நன்றாக சமைப்பவர், என்னுடன் எப்போதும் உறுதுணையாக இருப்பார், என்னோடு நகைச்சுவையாக பேசுவார், நல்ல ஆசான், சிறந்த தோழி, உங்கள் இழப்பை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் என உருக்கமாக தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Share this story