‘ஆனந்தி’ சீரியலில் இணைந்த பிரபல சீரியல் நடிகர்

‘ஆனந்தி’ சீரியலில் இணைந்த பிரபல சீரியல் நடிகர்

ராஜ் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘ஆனந்தி’ சீரியலில் பிரபல சீரியல் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

‘ஆனந்தி’ சீரியலில் இணைந்த பிரபல சீரியல் நடிகர்

‘இளவரசி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் அருண்குமார் ராஜன். அதன்பிறகு அழகி, சந்திரலேகா, வாணி ராணி, கல்யாண பரிசு, இளவரசி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றார். இவர் ராதிகாவுடன் இணைந்து நடித்த ‘வாணி ராணி’ சீரியல் தான் மிகவும் பிரபலம். சூரிய நாராயணன் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றார்.

‘ஆனந்தி’ சீரியலில் இணைந்த பிரபல சீரியல் நடிகர்

தொடர்ந்து பல நடித்து வந்த இவர், தற்போது பூவே உனக்காக, சந்திரலேகா ஆகிய இரு சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஜ் டிவியில் புதிதாக ஒளிப்பரப்பாகி வரும் ஆனந்தி சீரியலில் அரண்குமார் இணைந்துள்ளார். இந்த சீரியலில் டாக்டர் கேரக்டரில் அருண்குமார் நடித்து வருகிறார். கீதா டெலி மீடியா தயாரிக்கும் இந்த சீரியலை சாய் மருது இயக்கி வருகிறார். இந்த சீரியலில் முன்னணி நடிகைள் நிரோஷா, விசித்ரா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த தகவலை நடிகர் அருண்குமார் ராஜன் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this story