மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ‘அரண்மனை கிளி’ ஜானு !

மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ‘அரண்மனை கிளி’ ஜானு !

பிரபல சீரியலான ‘அரண்மனை கிளி’ சீரியலில் நடித்த மோனிஷா, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க உள்ளார்.

மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ‘அரண்மனை கிளி’ ஜானு !

விஜய் டிவியில் கடந்த 2 வருடங்களாக ஒளிப்பரப்பாகி வந்த சீரியல் ‘அரண்மனை கிளி’. மீனாட்சி என்ற தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் நடிகை பிரகதி நடித்திருந்தார். இதில் கால் நடக்க முடியாத கணவன் அர்ஜுனை, மனைவி ஜானு எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வந்த இந்த சீரியல் கொரானா ஊரடங்கு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ‘அரண்மனை கிளி’ ஜானு !

இந்த சீரியலில் ஜானுவான நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றவர் நடிகை மோனிஷா. கேரளாவை சேர்ந்த இவர், தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். கொரானா காரணமாக சீரியல்களில் நடிக்காமல் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். ஆனால் நடிகை மோனிஷா எப்போது நடிப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ‘அரண்மனை கிளி’ ஜானு !

இந்நிலையில் நடிகை மோனிஷா மீண்டும் சீரியல் பக்கம் திரும்ப உள்ளார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளின் ஆதரவோடு வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் ‘பூவே பூச்சூடவா’. இந்த சீரியலில் புதிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை மோனிஷா நடிக்க உள்ளார். நடிகை மோனிஷாவின் சீரியல் வருகைக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Share this story