பாக்யாவிற்கு எதிராக சதி செய்யும் ராதிகா... உதவி செய்ய வரும் பிரபல நடிகர் !

baakyalakshmi

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பிரபல நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியில் பரபரப்பான கதைக்களத்துடன் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் பாக்யலட்சுமி. கோபியிடம் விட்ட சவாலின்படி முதற்கட்டமாக 2 லட்சம் கொடுத்து பாக்யா கெத்து காட்டி வருகிறார். அதேபோன்று ராதிகா வேலை பார்க்கும் நிறுவனத்தில் சமையல் டெண்டர் எடுத்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளார். அப்போது பாக்யாவிற்கு இங்கிலீஷ் தெரியாததால் ராதிகா அவமானப்படுத்துகிறார். 

baakyalakshmi

அதனால் இங்கிலீஷ் பயிற்சி வகுப்பிற்கு செல்ல பாக்யா முடிவு செய்கிறார். இதற்காக வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் வெளியே செல்லும் பாக்யா, இங்கிலீஷ் பயிற்சி வகுப்பில் சேர்கிறார். அதன்பிறகு வீட்டிற்கு போன் பேசிக் கொண்டே பைக் ஓட்டி வரும் பாக்யா, எதிர்பாராத விதமாக புல்லட் ஒன்றில் மோதுகிறார். இதனால் பாக்யாவிற்கு சிறிய அளவில் காயம் ஏற்படுகிறது. 

baakyalakshmi

அப்போது புல்லட் வரும் நபர் பாக்யாவிற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் புல்லட் வரும் நபர் நடிகர் ரஞ்சித். தற்போது பாக்யலட்சுமி சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரின் கதாப்பாத்திரம் பாக்யாவிற்கு உதவி செய்யும் கதாபாத்திரமாக இருக்கும் என தெரிகிறது. 

Share this story