விஜய் டிவி பிரபலத்தை மணந்த 'பாக்யலட்சுமி' சீரியல் நடிகை... கோலாகலமாக நடந்த திருமணம் !

rithika

'பாக்யலட்சுமி' சீரியல் நடிகை ரித்திகாவின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. 

தமிழ் சின்னத்திரை பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் ரித்திகா. 'ராஜா ராணி' சீரியல் மூலம் அறிமுகமான இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பாக்யாவின் இரண்டாவது மகன் எழிலின் காதலி அமிர்தா கதாபாத்திரத்தில் ரித்திகா நடித்து வருகிறார். 

rithika

சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் ரித்திகா, திருமணம் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதையடுத்து அவர் யாரை திருமணம் செய்யவுள்ளார் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்தது. ரித்திகாவின் வருங்கால கணவர் விஜய் டிவியின் பிரபலம் என கூறப்பட்டது. 

rithika

இந்நிலையில் நடிகை ரித்திகாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. வினு என்பவரை ரித்திகா திருமணம் செய்துள்ளார். இவர் விஜய் டிவியில் முக்கிய நிர்வாகியாக இருப்பதாக கூறப்படுகிறது. ரித்திகா மற்றும் வினு ஜோடியின் திருமணத்தில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். ரசிகர்களும் சமூக வலைத்தளம் வாயிலாக மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Share this story