முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா சீசன் 2’... வேறு வழியில்லாமல் கடையை இழுத்து மூடும் விஜய் டிவி !

பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது.
விஜய் டிவியில் டாப் சீரியலாக ஒளிப்பரப்பாகி வந்த சீரியல் பாரதி கண்ணம்மா.. கணவரை விட்டு பிரியும் மனைவி தனி ஒரு பெண்ணாக எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் சீரியலின் கதைக்களம். பாரதி - கண்ணம்மா என்ற இரு கேரக்டரை வைத்து ஒளிப்பரப்பான இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷ்னி விலகியதால் வரவேற்பு குறைந்தது. ஆனாலும் கதைக்களத்தை மாற்றி எடுத்து வந்த இயக்குனருக்கு தோல்வியே கிடைத்தது. அதனால் சீரியலுக்கு என்ட்டு கார்டு போடப்பட்டது.
இதையடுத்து ‘பாரதி கண்ணம்மா சீசன் 2’ தொடங்கப்பட்டது. முதல் சீசன் போல் இல்லாமல் கிராமத்தில் கதைக்களத்தில் உருவாகி ஒளிப்பரப்பானது. இந்த சீரியலில் சிபுசோரன், வினுஷா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் கொஞ்சம் விறுவிறுப்பான கதைக்களத்தில் சென்றுக் கொண்டிருந்த சீரியல் தற்போது போதிய வரவேற்பை பெறவில்லை.
அதனால் சீரியலை முடிக்க குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு டிஆர்பி இல்லை என்று காரணம் கூறப்பட்டாலும் புதிய சீரியல் ஒன்று அந்த நேரத்தில் ஒளிப்பரப்பாக உள்ளதால் முடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.