புதிய சாதனை படைத்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். பாரதியுடன் கண்ணம்மா சேருவது எப்போது ?

புதிய சாதனை படைத்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். பாரதியுடன் கண்ணம்மா சேருவது எப்போது ?

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வெற்றிகரமாக தனது 500வது எபிசோடை கடந்து சாதனை படைத்துள்ளது.

வங்காளத்தில் பெரிய ஹிட் பெற்ற ‘கிருஷ்ணகோலி’ என்ற சீரியலின் தமிழ் ரீமேக்காக உருவாகி ஒளிப்பரப்பாகி வருகிறது ‘பாரதி கண்ணம்மா’. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் ரோஷ்ணி நடித்துள்ளார், டாக்டர் பாரதி கேரக்டரில் பிரசாத் நடித்து வருகிறார்.

புதிய சாதனை படைத்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். பாரதியுடன் கண்ணம்மா சேருவது எப்போது ?

பாரதி, கண்ணம்மா இரு கேரக்டரை வைத்துதான் இந்த சீரியலின் கதையே நகர்ந்து வருகிறது. இதில் வில்லியாக வெண்பா கேரக்டரில் ஃபரீனா நடித்து வருகிறார். அன்பாக வாழும் கணவர், மனைவி இடையே ஏற்படும் சந்தேகத்தால், வீட்டை விட்டு வெளியேறும் மனைவி கண்ணம்மா தனி ஆளாக தனது மகளை வளர்த்து வருகிறாள். இதில் உள்ள திருப்பங்களை தான் பல எபிசோடுகளை எடுத்து வருகின்றனர்.

புதிய சாதனை படைத்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். பாரதியுடன் கண்ணம்மா சேருவது எப்போது ?

இந்நிலையில் இல்லத்தரசிகளின் அமோக ஆதரவுடன் விறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தற்போது 500 எபிசோடுகளை கடந்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனால் இந்த சீரியல் குழுவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Share this story