உங்கள் அன்புக்கு நன்றி… மகிழ்ச்சியில் பிக்பாஸ் ‘ரியோ’!

உங்கள் அன்புக்கு நன்றி… மகிழ்ச்சியில் பிக்பாஸ் ‘ரியோ’!

உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என பிக்பாஸ் பிரபலம் ரியோ ராஜ் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 கிராண்ட் பினாலே கடந்த பிரம்மாண்டமாக நடந்து முடிந்து. இதில் ரியோ, சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஷிவானி, ஆரி, சோம் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆரி வின்னராக தேர்வானார். ரன்னராக பாலாஜி தேர்தெடுக்கப்பட்டார். இதில் 5 போட்டியாளர்கள் வின்னர் லிஸ்ட்டில் இருந்தநிலையில் ரியோ கடைசி நாளில்தான் வெளியேறினார்.

உங்கள் அன்புக்கு நன்றி… மகிழ்ச்சியில் பிக்பாஸ் ‘ரியோ’!

ரியோ எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டதால் அவரது சமூகவலைத்தளங்கள் செயல்படாமல் இருந்தது.

உங்கள் அன்புக்கு நன்றி… மகிழ்ச்சியில் பிக்பாஸ் ‘ரியோ’!

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் ரியோ மீண்டும் சமூகவலைத்தளங்களுக்கு திரும்பியுள்ளார். ரியோ இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வணக்கம், எல்லாரும் நல்ல இருக்கீங்க? நான் இப்ப நல்ல இருக்கிறேன். பிக்பாஸ் எனக்கு ஒரு அழகான பயணமாக இருந்தது. நீங்க எனக்கு கொடுத்த ஆதரவு, புகைப்படங்கள் எல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியா இருந்தது.

நிறைய வேலை உள்ளது. அடுத்தடுத்து அந்த வேலைகளை பார்க்க இருக்கிறேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கு நன்றி என்று ரியோ தெரிவித்துள்ளார்.

Share this story