விக்ரமனை ‘அவன் இவன்’ என்று பேசிய அசீம்.. எல்லை மீறிய சண்டையால் களவரமான பிக்பாஸ் வீடு !

biggboss 6

விக்ரமனிடம் அசீம் அநாகரீகமாக நடந்துக் கொள்ளும் பரபரப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸின் இந்த சீசனை பெரும் ரகளையுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சண்டைப்போடுவதையும், வம்புழுப்பதையுமே முழு நேர வேலையாக செய்கிறார் அசீம். ஏற்கனவே ஆயிஷா, விக்ரமனிடம் அசீம் சண்டை போட்டு அது கமலிடம் சென்றது. அப்போது அசீமை கமல் கடுமையாக கண்டித்தார். 

biggboss 6

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் ராஜா ராணி டாஸ்க்கில் போட்டியாளர்கள் விளையாடுவது போன்று காட்டப்படுகிறது. அதில் எச்சை துப்பி சாப்பாடு தந்தால் சாப்பிடுவியா என விக்ரமிடம் அசீன் கேட்கிறார். இதனால் கடுப்பான விக்ரமன், அநாகரிகமாக பேசுவிற்கு யார் அதிகாரம் கொடுத்தது என அசீமிடம் கேட்கிறார். 

biggboss 6

அசீமின் இந்த அத்துமீறலை யாருமே கேட்க மாட்டீங்களா என சக போட்டியாளர்களிடம் விக்ரமன் கேட்கிறார். ஆனால் விக்மனுக்கு யாரும் ஆதரவு தரவில்லை. அப்போது விக்ரமினை அவன் இவன் என்று அசீம் பேச சண்டை பெரிதானது. அந்த நேரத்தில் விக்ரமனை அசீம் அடிக்கவும் பாய்கிறார். இதனால் சிறிது நேரம் பிக்பாஸ் வீடு போர்க்களமானது. அசீம் இப்படி தொடர்ந்து எல்லை மீறுவது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. 


 

 

Share this story