பிக்பாஸ் ரூல்லை மீறிய தனலட்சுமி.. சாட்டையை சுழற்றிய கமல் !

biggboss 6

பிக்பாஸ் ரூல்லை மீறியதால் தனலட்சுமியை கமல் வறுத்தெடுக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்கிறது. தினம் தினம் ஒரு சண்டை என போட்டியாளர்களுக்குள் ஒரு பெரிய பிரளயமே வெடிக்கிறது. இதற்கு காரணம் அடுத்தடுத்து பிக்பாஸில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் தான். அந்த வகையில் கடந்த வாரம் ஸ்வீட் ஸ்டால் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடினர். 

biggboss 6

இந்த டாஸ்க்கில் கன்வேயர் வழியாக வரும் பொருட்களை எடுக்க போட்டாபோட்டியே நடைபெற்றது. முதலில் தனலட்சுமிக்கும் மணிகண்டனுக்கும் இடையே சண்டை வெடித்தது. தனலட்சுமி கையில் இருந்த ஸ்வீட் பாக்சை மணிகண்டன் பிடுங்கியதால் மிகவும் கோபமாகி ஒருமையில் பேச ஆரம்பித்தார் தனலட்சுமி. அதேபோன்று மணிகண்டன் மற்றும் அமுதவாணன் இடையே ஒரு சண்டை ஏற்பட்டது. கடைசியில் பல சண்டைகளுக்கு மத்தியில் அமுதவாணன் அணி ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது. 

biggboss 6

 இந்நிலையில் இன்றைக்கு வெளியான முதல் ப்ரோமோவில் உங்கள் விழிப்புணர்வுக்காக ஒரு படம் போடுகிறேன் என்று குறும்படம் ஒன்றை போட்டியாளர்களிடம் போட்டு காண்பிக்கிறார் கமல். இதை பார்த்த போட்டியாளர்கள் குலுக்கி குலுக்கி சிரிக்கிறார்கள் இப்போது சிரித்தது போல எப்போதும் சிரித்துக் கொண்டிருந்தால், நான் நல்லவனாக இருக்க மாட்டேன் என்கிறார் கமல். 

biggboss 6

பிக்பாஸ் ஒரு ரூல்ஸ் வெச்சாரு. அந்த ரூல்ஸ்படி நீங்க யாரும் விளையாடவில்லை. இந்த வெற்றி தனலட்சுமியிடம் பறிக்கப்பட்டு, நாமினேஷில் இருந்து நீங்கள், ப்ரீ என்கிற உரிமையை இழக்கிறீர்கள். அதற்கு பதிலாக நியாயமாக விளையாடிய விக்ரமனுக்கு அது கொடுக்கப்படுகிறது. நீங்கள் கண் கலங்கினாலும் ஆறுதல் சொல்லுவது நான் என்று தனலட்சுமிக்கு கமல் கூறும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.   

 

Share this story