‘குக் வித் கோமாளி’ சீசன் 3 எப்போது ? புகழ் தந்த சூப்பர் அப்டேட் !

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 எப்போது ? புகழ் தந்த சூப்பர் அப்டேட் !

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 எப்போது தொடங்கப்படும் என்ற தகவலை நடிகர் புகழ் தெரிவித்துள்ளார்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 எப்போது ? புகழ் தந்த சூப்பர் அப்டேட் !

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸை அடுத்து அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரே நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் போகபோக எராளமான பார்வையாளர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது. முதல் சீசனில் வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு விளையாடினர். இதில் வனிதா வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 எப்போது ? புகழ் தந்த சூப்பர் அப்டேட் !

முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகியோர் குக்காகவும், புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்துக்கொண்டனர். முதல் சீசனைவிட கலப்பாக ஒளிப்பரபான இந்நிகழ்ச்சியில் காரக்குழம்பு ‘கனி’ டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அஸ்வின், ஷகிலா ஆகிய இருவரும் ரன்னராக தேர்வாகினர். இதில் சிம்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 எப்போது ? புகழ் தந்த சூப்பர் அப்டேட் !

தற்போது கோடிக்கணக்கான பார்வையாளர்களை கொண்ட இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் புகழ், வீடியோ கால் மூலம் தனது குட்டீஸ் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 எப்போது தொடங்கும் என குட்டீஸ் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த புகழ், இன்னும் மூன்று மாதங்களில் சீசன் 3 தொடங்கும் என சூசகமாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story