பிக் பாஸில் ஆள்மாறாட்டம்.. இனி நடக்கப்போவது என்ன.. ப்ரோமோ வீடியோ

big boss

பிக் பாஸ் 8ல் கடந்த வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற தர்ஷா குப்தா வீட்டிலிருந்து வெளியேறினார். இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், 15 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இதில் ஆண்கள் அணியில் 7 பேர் மற்றும் பெண்கள் அணியில் 8 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது வாரம் துவங்கிய நிலையில் முத்து கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து இன்று வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த டாஸ்க்கிற்கு ஆள்மாறாட்டம் என தலைப்பு வைத்துள்ள நிலையில், அதற்கு ஏற்றார் போல் ஒருவர் மற்றொரு போல் மாறி பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் இருக்க போகிறார்கள்.

ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை போல் நடை உடை பாவனையில் மட்டுமின்றி, அவர் மக்களுக்கு இதுவரை காட்டாத முகத்தை நீங்கள் எடுத்துக்காட்டலாம் என்றும் பிக் பாஸ் கூறியுள்ளார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this story