பிரபல சன்டிவி சீரியலின் கதாநாயகி மாற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல சன்டிவி சீரியலின் கதாநாயகி மாற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மகராசி சீரியலின் கதாநாயகி மாற்றப்பட்டுள்ளார்.

திரைப்படங்கள் போல் அல்லாமல் சீரியல்கள் வருடக்கணக்கில் நடைபெறுவதால் அதில் நடித்து வரும் சில நடிகர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் அதிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே அந்தக் கதாபாத்திரத்திற்குப் பதிலாக புதிதாக மற்றொருவர் இணைவார். தற்போது சீரியல்களில் நடிகர்கள் மாற்றம் செய்யப்படுவது அதிகமாகி வருகிறது.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியலின் கதாநாயகி மாற்றப்பட்டுள்ளது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சன்டிவி சீரியலின் கதாநாயகி மாற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘மகராசி’ சீரியலில் திவ்யா ஸ்ரீதர் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் 400 எபிசோடுகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

பிரபல சன்டிவி சீரியலின் கதாநாயகி மாற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி!

தற்போது சீரியலில் நாயகி திவ்யா ஸ்ரீதர் சீரியலில் இருந்து மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நடிகை ரீதிகா சனீஷ் இணைந்துள்ளார்.

ரீதிகா சனீஷ் சன் டிவியின் நாதஸ்வரம் சீரியலில் நடித்திருந்தார். தற்போது கல்யாண பரிசு 2 சீரியலில் நடித்து வருகிறார். தற்போது அவர் மகராசி சீரியலில் இணைந்துள்ளார். வீடியோ வெளியிட்டும் ரீதிகா சனீஷ் அதைப் பகிர்ந்துள்ளார்.

Share this story