’செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானாவுடன் காதலா ? மனம் திறந்த பிரபல நடிகர்

’செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானாவுடன் காதலா ? மனம் திறந்த பிரபல நடிகர்

‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா, பிரபல நடிகரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

’செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானாவுடன் காதலா ? மனம் திறந்த பிரபல நடிகர்

பிரபல தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘செம்பருத்தி’ கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிகை பிரியா ராமன், ஆதிக்கடவூர்  அகிலாண்டேஸ்வரி என்ற கம்பீரமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக ஷபானாவும் நடித்து வருகின்றனர்.

’செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானாவுடன் காதலா ? மனம் திறந்த பிரபல நடிகர்

இதற்கிடையே நடிகை ஷபானா, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘பாக்யலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் ஆர்யனை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கிசுகிசுப்புகளும் சின்னத்திரை வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்த காதல் விவகாரம் குறித்து இருவரும் மறுத்து பேசவில்லை.

’செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானாவுடன் காதலா ? மனம் திறந்த பிரபல நடிகர்

இந்நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் ஆர்யனிடம், நான் உங்களை திருமணம் செய்துக் கொள்ளலாமா என ரசிகை ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்யன், “ஷபானா… இவங்களுக்கு என்ன சொல்லட்டும்?” என ரசிகையிடம் பதில் கேள்வி எழுப்பினார். இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஷபானா, ‘மைன்’ என தெரிவித்துள்ளார். இருவரும் ஒரே மாதிரியாக பதிவிட்டுள்ளதால் ஆர்யனும், ஷபானாவும் காதலித்து வருவது உறுதியாகியுள்ளது.

Share this story