மாஸாக ரேஸ் பைக் ஓட்டும் பிரபல சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோ !

மாஸாக ரேஸ் பைக் ஓட்டும் பிரபல சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோ !

பிரபல சீரியல் நடிகை ஒருவர் மாஸாக பைக் ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மாஸாக ரேஸ் பைக் ஓட்டும் பிரபல சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோ !

தமிழகத்தில் சமீபகாலமாக சீரியல்களுக்கு வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காரணம் சீரியல்களுக்கான கதைக்களம்தான் என கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் எடுக்கப்படும் சீரியல்கள் பெரும்பாலும் காதலை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறது. அப்படி எடுக்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி பிரபலமான சீரியல் ‘ராஜா ராணி’.

மாஸாக ரேஸ் பைக் ஓட்டும் பிரபல சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோ !

அந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சஞ்சீவ்வும், ஹீரோயினாக ஆல்யா மானஸா நடித்து வந்தனர். இவர்களின் காதல் காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். சீரியலில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ஜோடி, காதலித்து நிஜ வாழ்க்கையிலேயே திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடிக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

மாஸாக ரேஸ் பைக் ஓட்டும் பிரபல சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோ !

ஆல்யா மானசா தற்போது ராஜா ராணி சீசன் 2-ல் நடித்து வருகிறார். கொரானா ஊரடங்கால் தற்போது சீரியல் ஷூட்டிங் இல்லாததால் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார் ஆல்யா. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா, ரேஸ் பைக் ஓட்டு புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மாஸாக பைக் ஓட்டும் அந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Share this story