உயிருக்கு போராடுவதாக வதந்தி.. டென்ஷனான பிரபல சீரியல் நடிகை தக்க பதிலடி!

உயிருக்கு போராடுவதாக வதந்தி.. டென்ஷனான பிரபல சீரியல் நடிகை தக்க பதிலடி!

உயிருக்கு போராடுவதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகை கேப்ரியெல்லா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

டிக்டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியெல்லா. ரசிகர்களிடையே நல்ல அறிமுகம் பெற்ற இவர், நயன்தாரா நடித்த ‘ஐரா’ படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியலில் மெயின் ரோலில் நடித்து வருகிறார். கருப்பாக இருக்கும் ஒரு கிராமத்து பெண்ணின் வாழ்க்கையை மையாக வைத்து இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

உயிருக்கு போராடுவதாக வதந்தி.. டென்ஷனான பிரபல சீரியல் நடிகை தக்க பதிலடி!

இந்த சீரியல் தவிர லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘N4’ என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதோடு ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக் ஆல்பம் ஒன்றிலும் கேப்ரியெல்லா நடித்துள்ளார்.

உயிருக்கு போராடுவதாக வதந்தி.. டென்ஷனான பிரபல சீரியல் நடிகை தக்க பதிலடி!

அண்மையில் கேப்ரியெல்லா கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து வீட்டு தனிமையில் இருந்து வருகிறார். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கேப்ரியெல்லா இருப்பதாக யூட்யூப்பில் வீடியோ பதிவிட்டு வதந்தி கிளப்பியுள்ளனர் சிலர். இந்த வீடியோவை பார்த்து டென்ஷனான அவர், சமூக வலைத்தளத்தில் அது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் “நான் நல்லா தான் இருக்கேன். டைட்டிலை பாரு உயிருக்கு போராடறாங்களாம். ஐம் குட் உடம்பு சரி ஆகிட்டு இருக்கு” என குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story