சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு... அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் !

vj chitra

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு தொடர்பாக அதிரடி உத்தரவு ஒன்றை சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்துள்ளது.

தமிழ் சின்னத்திரை உலகில் பூகம்பத்தை ஏற்படுத்திய விவகாரம் நடிகை சித்ரா தற்கொலை சம்பவம். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர் சித்ரா. தன்னுடைய சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்தார்.  

vj chitra

இதையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர், சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். 

இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சித்ராவின் வழக்கை 6 மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

Share this story