‘மகராசி’ சீரியலிருந்து விலகும் திவ்யா ஸ்ரீதர்… அவரது கேரக்டரில் யார் தெரியுமா ?

‘மகராசி’ சீரியலிருந்து  விலகும் திவ்யா ஸ்ரீதர்… அவரது கேரக்டரில் யார் தெரியுமா ?

‘மகராசி’ சீரியலில் இருந்து திவ்யா ஸ்ரீதர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மகராசி’ சீரியலிருந்து  விலகும் திவ்யா ஸ்ரீதர்… அவரது கேரக்டரில் யார் தெரியுமா ?

கடந்த 2019ம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘மகராசி’. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை சுந்தரேஸ்வரன் இயக்கி வருகிறார். இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் ஸ்ரீரஞ்சனி, திவ்யா ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஆர். ஆர்யான், விஜய், ராம்ஜி, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

‘மகராசி’ சீரியலிருந்து  விலகும் திவ்யா ஸ்ரீதர்… அவரது கேரக்டரில் யார் தெரியுமா ?

இந்த சீரியலின் ஷூட்டிங் கொரோனா ஊரங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரானாவின் தாக்கம் குறைந்து வருவதால் சீரியலின் ஷூட்டிங்கை விரைவில் துவங்க சீரியல் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதில் நடிக்கும் சில நடிகர்கள் கொரானா அச்சுறுத்தலை காரணம் காட்டி நடிக்க தயங்குகின்றனர்.

‘மகராசி’ சீரியலிருந்து  விலகும் திவ்யா ஸ்ரீதர்… அவரது கேரக்டரில் யார் தெரியுமா ?

இந்நிலையில் கொரானா பாதுகாப்பு கருதி நடிகை திவ்யா ஸ்ரீதர் இந்த சீரியலிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியான தகவல் என்பதால், அவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. திவ்யா ஸ்ரீதர் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஸ்ரீத்திகா சனீஷ் நடிக்க உள்ளார். இருந்தப்போதிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மெட்டி ஒலி, முத்தாரம், கலசம், குலதெய்வம் உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடிகை ஸ்ரீத்திகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story